கோவை வஉசி பார்க் அருகே வாலிபரை கடத்தி பணம், செல்போன், ஆவணங்கள் பறிப்பு: மூவர் கைது

கோவையில் நில விற்பனை தொடர்பான தகராறில், வாலிபரை கடத்தி பணம், செல்போன், நில ஆவணங்களை பறித்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இரு நபர்கள் தலைமறைவாக உள்ளனர்.


Coimbatore: கோவை வஉசி பார்க் அருகே நடந்த கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நில விற்பனை தொடர்பான தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அச்சையூரை சேர்ந்த விவசாயி தாமோதரன் (31), தனது 35 சென்ட் நிலத்தை தாராபுரம் தாசம்பட்டியை சேர்ந்த கட்டுமான தொழிலதிபர் ஹரிபிரசாத் (34) என்பவருக்கு ரூ. 2.50 கோடிக்கு விற்க ஒப்பந்தம் செய்திருந்தார். முதற்கட்டமாக ரூ. 8.25 லட்சம் கொடுக்கப்பட்டது. ஆனால், மீதமுள்ள தொகை குறித்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

சம்பவ தினத்தன்று, நிலம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஹரிபிரசாத் தாமோதரனை கோவைக்கு அழைத்தார். வஉசி பார்க் அருகே வந்த தாமோதரனை இரண்டு வாலிபர்கள் காரில் கடத்தி சென்றனர். பின்னர் அவரிடமிருந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ. 30,000 எடுத்துக் கொண்டதோடு, அவரது செல்போன் மற்றும் நில ஆவணங்களையும் பறித்துக் கொண்டு தப்பினர்.

இது குறித்து தாமோதரன் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், ஹரிபிரசாத்தின் தூண்டுதலின் பேரில் இச்சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஹரிபிரசாத், கணபதி சங்கனூரை சேர்ந்த பிரவீன்குமார் (37), சரவணம்பட்டி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த பாபு (38) ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய செந்தில், ஜான்சன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது போலீசார் இவர்களை தேடி வருகின்றனர். வழக்கு தொடர்பான விசாரணை ஜூன் 5 அன்று நடைபெற உள்ளது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...