வாயில் வடை சுடுகிறார் அண்ணாமலை - கோவையில் எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார். அதிமுக தொடர்பான அண்ணாமலையின் கருத்துக்களை எடப்பாடி மறுத்தார்.


Coimbatore: கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார்.

அதிமுக தொடர்பாக அண்ணாமலை தெரிவித்த கருத்துக்களை மறுத்த எடப்பாடி, "விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்புக்கு பல்வேறு காரணங்கள் கூறியுள்ளோம். ஈரோடு இடைத்தேர்தலில் திமுக எப்படி நடந்துகொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஆடு மாடு போல் மக்களை பட்டியில் அடைத்து பரிசு, பணம் கொடுத்து தேர்தலை சந்திதனர். அப்போது அண்ணாமலை எங்கள் கூட்டணியில் தான் இருந்தார். அவருக்கும் இது நன்றாகத் தெரியும். இருந்தும் அதிமுக நிலைபாடு குறித்து இப்படி சொல்வது கண்டிக்கத்தக்கது," என்றார்.



மேலும் அவர், "அண்ணாமலை வந்த பிறகு தான் பாஜக வளர்ந்துள்ளது போல மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார். அது உண்மை அல்ல. இந்த தேர்தலில் கோவையில் அண்ணாமலை போட்டியிட்டு 1 லட்சம் வாக்குகள் திமுக வை விட குறைவாக பெற்றுள்ளார். பின் எப்படி வளர்ந்துள்ளது என கூற முடியும். முந்தைய தேர்தலில் 18.8 % பெற்ற பாஜக, இந்த தேர்தலில் 18.28 % தான் பாஜக கூட்டணி பெற்றுள்ளது. அதன் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டு தான் வருகிறது," என்று விளக்கினார்.

அண்ணாமலையின் செயல்பாடுகளை விமர்சித்த எடப்பாடி, "தினம்தோறும் பேட்டி கொடுத்து மட்டுமே வருகிறார். மற்ற கட்சிகளை பற்றியே பேசி வருகிறார். எந்த மத்திய அரசு திட்டத்தையும் தமிழகத்தற்கு கொண்டு வராமல், வாயில் வடை சுட்டு வருகிறார்," என்று கூறினார்.



அதிமுகவில் இருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் இணைக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு, "இது கார்ப்பரேட் கம்பெனி கிடையாது, விலகியவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்வதற்கு. அதிமுகவிற்கு என விதிமுறைகள் உள்ளது. பெரும்பான்மை தொண்டர்களின் எண்ணமாக, பொதுக்குழுவின் ஒருமித்த தீர்மானத்தோடு தான் அவர்கள் விலக்கப்பட்டனர். மீண்டும் அவர்களை கட்சியில் சேர்க்கும் எண்ணம் இல்லை," என உறுதியாக தெரிவித்தார்.

திமுக அரசின் செயல்பாடுகளையும் விமர்சித்த எடப்பாடி, "கள்ளச்சாராய விவகாரத்தை திமுக அரசு திட்டமிட்டு மறைக்கின்றது. கள்ளக்குறிச்சியை தொடர்ந்து ஆனைமலை, விழுப்புரம், கடலூர், திருத்தணி ஆகிய பகுதிகளிலும் கள்ளச்சாராயம், விஷச்சாராயம், மெத்தனால் பதுக்கல் வழக்குகள் பதியப்பட்டு வருகிறது. இதுகுறித்து விசாரிக்க அதிமுகவின் மக்கள் பிரதிநிதிகள் அனுமதிக்கப்படுவதில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது," என்றார்.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...