கோவையில் உட்கட்டமைப்பினை மேம்படுத்துதல் தொடர்பாக பள்ளிகளில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

செல்வபுரம் பகுதியில் செயல்படும் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார். பாடத்திட்டங்கள் குறித்து மாணவியர்களிடம் அவர் கலந்துரையாடினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளின் உட்கட்டமைப்பினை மேம்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (26.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 83 ஆரம்பப் பள்ளிகள், 38 நடுநிலைப்பள்ளிகள், 10 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 17 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 148 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



அதன்படி, மாநகராட்சி ஆணையாளர், மத்திய மண்டலத்திற்குட்பட்ட சுண்டக்காமுத்தூர் சாலை, செல்வபுரம் பகுதியில் செயல்படும் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியினை நேரில் சென்று பார்வையிட்டு, மாணவியர்களிடம் பாடத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார்.



மேலும், அப்பள்ளிகளில் கழிப்பறைகள் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.



அதனைத்தொடர்ந்து, மத்திய மண்டலம் சாரமேடு அனுப்பர்பாளையம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியினையும்,



வடக்கு மண்டலம் வார்டு எண் 3 -அஞ்சுகம் நகர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியினையும் மற்றும்



வார்டு எண்.28க்குட்பட்ட ஆவாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியினையும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு, பள்ளிகளின் உட்கட்டமைப்பினை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு,



அஞ்சுகம் நகர் மாநகராட்சி தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவினை சுவைத்து பார்த்தார்.



மேலும், வடக்கு மண்டலம் வார்டு எண் -10 சரவணம்பட்டி எரியூட்டு மயான வளாகத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அபிவிருத்தி பணிகளை மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



முன்னதாக, மத்திய மண்டலம் நஞ்சப்பா சாலை பகுதியில், மாநகராட்சி பகுதிக்குட்பட்ட சாலைகளில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்றுவதற்காக கொள்முதல் செய்யப்பட்ட நவீன மர அறுவை இயந்திரத்தின் செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வுகளின்போது, மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.ச.செல்வசுரபி, வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர்கள் செந்தில்குமரன், ஸ்ரீதேவி, மாமன்ற உறுப்பினர்கள் கவிதா, கண்ணகிஜோதிபாசு, உதவி செயற்பொறியாளர்கள் ஹேமலதா, எழில் உதவி பொறியாளர்கள் சதீஷ்குமார், சக்திவேல், பள்ளி தலைமை ஆசிரியர்கள், சி.ஆர்.ஐ.பம்ஸ் தலைவர் சௌந்தர்ராஜன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...