ரஷ்யாவில் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் உயர்கல்வி பயில்வதற்கு கோவையில் வரும் ஜூன் 28 ந்தேதி வழிகாட்டுதல் கண்காட்சி..!

மாணவர்களுக்கு அரசு நிதியுதவியுடன் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் முதல் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், தேவைப்படுபவர்களுக்கு வங்கி கடன் உதவிகளும் ஏற்பாடு செய்து தருவதாக அவர் தெரிவித்தார்.



Coimbatore: ரஷ்யாவில் சென்று மருத்துவம், பொறியியல்,தொழில்நுட்பம்உள்ளிட்ட உயர்கல்வி பயில்வதற்கான கல்வி கண்காட்சி கோவையில் வரும் ஜூன் 28 ஆம் தேதி அவினாசி சாலையில் உள்ள தி கிராண்ட் ரீஜன்ட் ஓட்டலில் நடைபெற உள்ளது.



இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. இதில்,ஸ்டடி அப்ராட் (Study Abroad) மேலாண் இயக்குனர் சுரேஷ் பாபு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், 2024- -25ம் கல்வி ஆண்டில்,இந்திய மாணவர்களுக்கு 8000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களை ரஷ்யாவில் உள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் வழங்க உள்ளன. இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் அனைத்து சமீபத்திய விதிமுறைகளையும் ரஷ்யா கடைப்பிடித்து வருவதாலும், மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதாலும், மருத்துவக் கல்வியைப் படிக்க விரும்பும்மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார்.



இந்த மருத்துவப் படிப்புகளுக்கான ஸ்பாட் அட்மிஷன், நடைபெற உள்ளதாக குறிப்பிட்ட அவர், எம்.பி.பி.எஸ். மட்டுமல்லாது பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளில் இளநிலை பட்டங்களுக்கும் ஸ்பாட் அட்மிஷன் கிடைக்கும் என தெரிவித்தார். நீட் தேர்வில் வெற்றி பெற்று குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள் தங்கள் மருத்துவ கனவை நனவாக்கரஷ்யாவில் உள்ள பல்கலைகழகங்களில் மருத்துவம்பயில்வதற்கு இது வாய்ப்பு என குறிப்பிட்டார்.



இந்த கல்வி கண்காட்சியில், ரஷ்யாவை சேர்ந்த கஜான், வோல்காகிரேடு, மெபி மருத்துவ பல்கலை கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள், டீன்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு, மருத்துவத் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்துப் பேச உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாணவர்களுக்கு அரசு நிதியுதவியுடன் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் முதல் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், தேவைப்படுபவர்களுக்குவங்கி கடன் உதவிகளும் ஏற்பாடு செய்து தருவதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...