கிட்டாம்பாளையத்தில் பட்டா நிலம் ஆக்கிரமிட்பு - பஞ்சாயத்து தலைவர் மீது கோவை ஆட்சியரிடம் மக்கள் புகார்

கிட்டாம்பாளையம் பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு அரசு வழங்கியுள்ள பட்டா நிலத்தை பஞ்சாயத்து தலைவர் ஆக்கிரமிட்பு செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் கோவை ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.


கோவை: கோவை கருமத்தம்பட்டி கிட்டாம்பாளையம் பகுதியில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு அரசு வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளது.

இந்த நிலையில் அந்த பட்டா நிலத்தை கிட்டாம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அந்த நிலத்தை மீட்டு தர வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் தலைவரிடம் இன்று ஜூன்.24 மனு அளித்தனர்.

இது குறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் முதல் முதலமைச்சர் வரை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்கள், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் முதல்வரை நேரில் சந்திக்க செல்ல உள்ளதாக கூறினர்.

மேலும் 2019ஆம் ஆண்டிலிருந்து சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்து வருவதாகவும், அதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...