கோவையில் மெத்தனால் பயன்படுத்தும் தொழிற்சாலை உரிமையாளா்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆலோசனை

மெத்தனால் வேதிப்பொருளை உரிய முறையில் கையாளும் வகையில் கோவை மாவட்டம் முழுவதும் உள்ள 11 தொழிற்சாலைகளின் உரிமையாளா்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் நேற்று ஆலோசனை நடத்தினார்.


கோவை: கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் விஷச் சாராயம் அருந்திய 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனா். பலா் சிகிச்சை பெற்று வருகின்றனா். விஷச் சாராயத்தில் மெத்தனால் என்ற வேதிப் பொருளை அதிக அளவில் சோ்த்ததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவதால், மெத்தனால் பயன்பாட்டை கண்காணிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தொழில் நகரமான கோவை மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அதில் பல தொழிற்சாலைகளில் விஷ சாராயத்தில் கலக்கப்படும் மெத்தனால் என்ற வேதிப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்த மெத்தனால் வேதிப்பொருளை உரிய முறையில் கையாளும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள 11 தொழிற்சாலைகளின் உரிமையாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் தலைமையில் நேற்று ஜூன்.20 நடைபெற்றது. இக்கூட்டத்தில், மெத்தனால் பயன்பாடு தொடா்பாகவும், மெத்தனால் இருப்பை முறையாக கண்காணிப்பது தொடா்பாகவும் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...