தமிழகம் மதவாதத்திற்கான மண் அல்ல என்பது தேர்தல் மூலம் தெரிய வந்துள்ளது -கோவையில் துரை வைகோ பேட்டி

தமிழகம் மட்டுமல்ல உத்திர பிரதேசமும் மதவாதத்திற்கான மண் அல்ல என தேர்தல் மூலம் தெரியவந்துள்ளது. திமுக கூட்டணியில் மதிமுக தொடரும். மக்களவைத் தேர்தல் வெற்றி என்பது மாற்றத்திற்கான ஒரு ஆரம்பம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை கொடிசியாவில் திமுக சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக மதிமுக தலைமை கழக செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று ஜூன்.15 கோவை வந்தடைந்தார். பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா இந்த விழாஎன்று தெரிவித்தார்.

திமுக அரசின் 3 ஆண்டு கால சாதனைக்கு கிடைத்த வெற்றி என்று தான் பார்க்க வேண்டும் எனவும், தமிழகம் திராவிட மண்,மதவாத அரசியலுக்கு இடம் இல்லை என்று மக்கள் வாக்குகள் செலுத்தி விடை அளித்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.திமுக கூட்டணியில் மதிமுகதொடரும். தமிழ்நாடு முழுவதும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை வலுப்படுத்தும் விதமாக சுற்று பயணம் செய்ய உள்ளேன் என கூறினார்.

மறுபடியும் திமுக கூட்டணி ஒரு மிகப் பெரிய வெற்றியை நாங்கள் பெறுவோம். அதற்கு நாங்கள் அந்த தேர்தலை ஒட்டி நாங்கள் செய்ய வேண்டிய பணிகள் நாங்கள் ஆயத்தமாக சுட்டி காட்ட விரும்புகிறேன் என்றார். மின்சார கட்டணத்தை பொறுத்தவரைதமிழக அரசு இதுவரை உயர்த்தும் என அறிவிக்கவில்லை. அது ஒரு வதந்தி என தெரிவித்தார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை பொருத்தவரை மதிமுக திமுக கூட்டணியில்தொடரும் எனவும் கூறினார்.

மக்களவைத் தேர்தல் வெற்றி என்பது மாற்றத்திற்கான ஒரு ஆரம்பம். பாஜகவிற்கு என தனி பெரும்பான்மை கிடையாது. கடந்த பத்தாண்டில் பாஜக, மக்கள் விரோத்திற்கு எதிரான சட்டங்கள் கொண்டு வந்துள்ளது. இனி அதற்கு இடமில்லை புதிய ஆரம்பம் புதிய நம்பிக்கை கொடுத்துள்ளது என குறிப்பிட்டார். மத்திய அரசின் சர்வதிகார போக்குமுடிவுக்கு வந்துள்ளது.

நாடாளுமன்ற செயல்பாடுகளில் முடிந்த அளவுக்கு பாஸ் மார்க் வாங்க வேண்டும். தமிழக மக்களின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்படுவேன். தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக வாஷ் அவுட், மேலும் பாஜகவினர் 11 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளனர். தமிழகம் மட்டுமல்ல உத்திர பிரதேசமும் மதவாதத்திற்கான மண் அல்ல என தேர்தல் மூலம் தெரிய வந்துள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். நாம் தமிழர் கட்சி பொறுத்தவரைக்கும் கூட்டணி அமைக்காமல்தனித்து போட்டியிட்டு 8% வாக்குகள் பெற்று இருப்பதுபாராட்டத்தக்கது.

மதிமுகவிற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் கொள்கை ரீதியான பல வேறுபாடுகள் இருந்தாலும் சீமானின் உழைப்பை பாராட்டத்தக்க வேண்டிய விஷயம் என்றார். மேலும் மாஞ்சோலை விவகாரத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அரசு நிக்க வேண்டும். அரசு தேயிலை தோட்டங்களில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு துரை வைகோ பேசினார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...