கோவை கொடிசியாவில் இன்று முப்பெரும் விழா - அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள் என அனைவரும் இன்று சாலை மார்கமாகவும், விமானம் மூலமாகவும் கோவைக்கு வருகின்றனர். விழாவிற்கான இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அமைச்சர் முத்துச்சாமி அங்கே இருந்து அனைத்தையும் கவனித்து வருகிறார்.


கோவை: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் I.N.D.I.A கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது, வெற்றிக்கு காரணமாக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு, கலைஞர் நூற்றாண்டு விழா என மூன்று நிகழ்வுகளை இணைத்து முப்பெரும் விழாவாக இன்று ஜூன்.15 கோவையில் கொடிசியா மைதானத்தில் நடத்தப்படுகிறது.

அதன்படி இன்று மாலை இந்த விழா துவங்க உள்ளது. இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். மேலும் தமிழக எம்.பி க்கள் 40 பேர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர்களான வைகோ, முத்தரசன், உட்பட முக்கிய திமுக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் விழாவிற்கான இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அமைச்சர் முத்துச்சாமி அங்கே இருந்து அனைத்தையும் பார்த்து வருகிறார். இவ்விழாவில் பங்கேற்பதற்காக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள் என அனைவரும் இன்று சாலை மார்கமாகவும், விமானம் மூலமாகவும் கோவைக்கு வருகை புரிய உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பேர் அமர இருக்கைகள் போடப்பட்டு பொதுமக்கள், திமுக தொண்டர்கள் வருவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பிற்காக இப்பகுதி மட்டுமல்லாது கொடிசியா சுற்றுப்புற பகுதிகள், விமான நிலையம் என சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...