கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என அறிவிப்பு

நிர்வாக காரணத்தால் கோவை மாநகராட்சியில் நாளை(11.06.24) மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என்று கோவை மாநகராட்சி தரப்பில் இன்று ஜூன்.10 தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் காலை 10 மணி முதல் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.இக்கூட்டத்தில் மேயரிடம் கோவை மாநகராட்சி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரில் வந்து வழங்க முடியும்.

இந்த கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவு மேயரால் வழங்கப்படும் என்பதால் இதில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக வழங்குவர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல் கடந்த 2 மாதங்களாக கோவை மாநகராட்சியில் இந்த கூட்டம் நடைபெறவில்லை.

இந்நிலையில், தேர்தல் முடிவடைந்ததை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் முடிவுக்கு வந்துள்ள நிலையில் நாளை (11.06.2024) இந்த கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிர்வாக காரணத்தால் நாளை இந்த கூட்டம் நடைபெறாது என கோவை மாநகராட்சி தரப்பில் இன்று ஜூன்.10 தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...