யூடியூப்பை பார்த்து படித்து நீட்‌ தேர்வில் 687 மதிப்பெண்கள் பெற்று காங்கேயம் மாணவன் சாதனை

மருத்துவ படிப்பின் மீது ஆர்வம் இருந்ததால் பள்ளி படிப்பின் போதே, தனியார் பயிற்சி மையங்களுக்கு செல்லாமல் எனது சொந்த முயற்சியில் இணையதள வழியாக யூடியூபில் நீட் தேர்வு சம்பந்தமான வீடியோக்களை பார்த்து கல்வி பயின்று 720 மதிப்பெண்களுக்கு 687 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன் என்று மாணவன் சஞ்சய் கூறியுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் குள்ளம்பாளையத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்துக் கொண்டே இணையதள வழியாக யூடியூபில் நீட் தேர்வு சம்பந்தமான வீடியோக்களை சஞ்சய் என்ற மாணவன் பார்த்து படித்து வந்தான். இந்நிலையில், கல்வி பயின்று முதன் முயற்சியிலேயே 720 மதிப்பெண்களுக்கு 687 மதிப்பெண்கள் பெற்று அந்த மாணவன் சாதனை படைத்துள்ளான்.



இதுகுறித்து, சஞ்சய் கூறியதாவது, எனது தந்தை ரமேஷ் சொந்தமாக அரசி கடை வைத்து நடத்திவருகிறார். நான் ஊதியூர் அருகே குள்ளம் பாளையத்திலுள்ள சாந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை முதலாம் ஆண்டும், இரண்டாம் ஆண்டும் கல்வி பயின்றேன். எனக்கு மருத்துவ படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் இருந்ததால் மேல்நிலைப் பள்ளி படிப்பின் போதே எனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள தனியார் பயிற்சி மையங்களுக்கு செல்லாமல் எனது சொந்த முயற்சியில் இணையதள வழியாக யூடியூபில் நீட் தேர்வு சம்பந்தமான வீடியோக்களை பார்த்து கல்வி பயின்று முதன் முயற்சியிலேயே 720 மதிப்பெண்களுக்கு 687 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளேன்.

மேலும், இந்த வெற்றிக்கு எனது பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், நண்பர்கள் ஆகியோர் சிறந்த ஊக்கம் கொடுத்தனர். இதனால்தான் என்னால் இந்த வெற்றி பெற முடிந்தது. இந்த முறை இந்திய அளவில் 25 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் நான் முதல் முயற்சியிலேயே 687 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளேன். இனி வருபவர்களும் விடாமுயற்சியாக படித்து வெற்றிபெற வேண்டும். இவ்வாறு மாணவன் சஞ்சய் கூறினான்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...