உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லுரி மற்றும் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லுரி மற்றும் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிழ்ச்சியில் புகையிலைனால் ஏற்படும் தீமைகள் மற்றும் உடல் உபாதைகள் பற்றி பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.


கோவை: புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒவ்வொரு வருடமும் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லுரி மற்றும் மருத்துவமனை சார்பாக நடைபெற்ற நிகழ்வில் கோவை பந்தய சாலை பகுதியில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின்இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை தாங்கி கொடியசைத்து விழாவினை தொடங்கி வைத்தார்.



கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்று சைக்கிளிங் மற்றும் நடைபயணம் சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பிரச்சார சீட்டுகள் வழங்கி புகையிலைனால் ஏற்படும் தீமைகள் மற்றும் உடல் உபாதைகளை பற்றிய விளக்கங்களை வழங்கினர்.



இதனை தொடர்ந்து புகையிலை பழக்கத்தை எதிர்த்து உறுதிமொழி மற்றும் கையெழுத்து பொதுமக்களிடம் இருந்து பெறப்பெற்றது. ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவகல்லூரியின் முதல்வர் தீபானந்தன், கோவை பந்தய சாலை காவல் நிலையத்தின் ஆய்வாளர் அர்ஜுன் மற்றும் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இவ்விழாவினை தொடங்கி வைத்து சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு புகையிலை உபயோகிப்பதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...