கோவை வந்த ரயில்களில் 2 பேர் உயிரிழப்பு - ரயில் நிலையத்தில் மருத்துவ வசதி ஏற்படுத்த பயணிகள் கோரிக்கை

தஞ்சாவூரிலிருந்து கோவைக்கு வந்த செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த சேந்தமங்கலத்தை சேர்ந்த காஜா என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதேபோல், ஐலண்ட்எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பெண் பயணி ஒருவரும் உயிரிந்தார்.


கோவை: கோவை ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு இன்று மே.30 காலை தஞ்சாவூரிலிருந்து செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அதில் எஸ் 11வது பெட்டியில் பயணம் செய்த திருவாரூர் அருகே உள்ள மன்னார்குடி, சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த காஜா (வயது 52) என்ற பயணிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு ரெயில் கோவை அருகில் வந்த போது அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் இது குறித்து அவரது மனைவி பூங்குழலி கொடுத்த புகாரின் பேரில் கோவை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதேபோன்று நேற்று மே.29 இரவு பாலக்காட்டில் இருந்து பெங்களூர் சென்ற ஐலண்ட்எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் பயணம் செய்த மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பெண் பயணியும் கோவை அருகில் ரயில் வந்த போது திடீரென இறந்தார்.

அடுத்தடுத்து ரயிலில் வந்த பயணிகள் இறந்ததால் கோவை ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவை வடவள்ளியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற பயணி கோவை ரயிலில் ஏறும்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். எனவே, ரயில் நிலையங்களில் டாக்டர்கள் குழு உடன் மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...