செங்கல் சூளைகளால் யானை வழித்தடம் பாதிப்பு - கோவை ஆட்சியரிடம் மண்டியிட்டு மனு அளித்த பா.ம.க நிர்வாகிகள்

சட்டவிரோதமாக இயங்கி வரும் செங்கல் சூளைகளால் யானைகள் வழித்தடங்கள் மற்றும் நீர்வழிப்பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை அகற்றக்கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் தடாகம், கணுவாய், சோமையம்பாளையம், மேட்டுப்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக இயங்கி வரும் செங்கல் சூளைகளால் யானைகள் வழித்தடங்கள் பாதிக்கப்படுவதாகவும், நீர்வழிப்பாதைகள் பாதிக்கப்படுவதாகவும் கூறி அவற்றை அகற்ற வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மே.27 மனு அளித்தனர்.

பாமக கோவை மாவட்டச் செயலாளர் ராஜ் தலைமையில் மனு அளிக்க வந்த அக்கட்சியினர் ஒற்றை காலில் மண்டியிட்டு கோரிக்கையை வலியுறுத்தினர்.

செங்கல் சூளைகளால் அப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளதை புகைப்படம் எடுத்து வந்தும், யானைகள் நீர்வழிபாதைகளை ஓவியங்களாக வரைந்து வந்தும், கண்டன பதாகைகளையும் ஏந்தி கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...