பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

வனபகுதிகளில் உள்ள 32 பீட் பகுதிகளில், ஒரு பீட் பகுதிக்கு ஒரு வனவர், வனக்காப்பாளர் மற்றும் இரண்டு வேட்டை தடுப்பு காவலர்கள் என நான்கு பேர் வீதம் மொத்தம் 128 வனத்துறையினர் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி மற்றும் உடுமலை அமராவதி என 6 வனச்சரங்கள் உள்ளன. இந்தப் வனபகுதிகளில் உள்ள 32 பீட் பகுதிகளில் ஒரு பீட் பகுதிக்கு ஒரு வனவர், வனக்காப்பாளர் மற்றும் இரண்டு வேட்டை தடுப்பு காவலர்கள் என நான்கு பேர் வீதம் மொத்தம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 128 வனத்துறையினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



இந்த கணக்கெடுப்பு பணியானது இன்று தொடங்கி நாளை மற்றும் நாளை மறுநாள் என மூன்று நாட்களுக்கு நடைபெறும் எனவும், பின்பு மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் இந்த கணக்கெடுப்பு பணி ஒப்படைக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் இந்த யானைகள் கணக்கெடுப்பில் வனத்துறையினருடன் இணைந்து தன்னார்வலர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மட்டும் வனத்துறையினர் மட்டுமே இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். தன்னார்வலர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...