இன்று கோவையில் 13 மையங்களில் நீட் தேர்வு: 6,967 பேர் தேர்வு எழுதவுள்ளனர்..!

கோவை மாவட்டத்தில்  13 மையங்களில், 371 அரசு பள்ளி மாணவ - மாணவிகள் உட்பட 6,967 பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர். இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை (மூன்று மணி 20 நிமிடம்) வரை தேர்வானது நடைபெறும்.


கோவை: நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. 2024 - 25 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி ஒன்பதாம் தேதி முதல் ஏப்ரல் பத்தாம் தேதி வரை நடைபெற்றது. 

அதன் தொடர்ச்சியாக, நீட் நுழைவுத் தேர்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கோவையில் 371 அரசு பள்ளி மாணவ - மாணவிகள் உட்பட 6,967 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

கோவை மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 13 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி, பீளமேடு நேஷனல் மாடல் பள்ளி, சரவணம்பட்டி பப்ளிக் பள்ளி, புளியகுளம் ரோடு வித்யா நிகேதன் பள்ளி, புரூக் பீல்ட்ஸ் சிக்னல் கிக்கானிக் பள்ளி, சரவணம்பட்டி விவேகம் ,பள்ளி, காளப்பட்டி ரோடு சுகுணா பிப் பள்ளி, பட்டணம் எஸ்.எஸ்.வி.எம் பள்ளி,கண்ணம்பாளையம் கே.ஐ.டி கலைஞர் கருணாநிதி தொழில் நுட்பக் கல்லூரி, சூலூர் ரத்தினவேல் சுப்பிரமணியம் கல்லூரி, எஸ்.எஸ் குளம் ஆதித்யா கல்லூரி, காளப்பட்டி ரோடு என்.ஜி.பி பள்ளி,பொள்ளாச்சி ஏ.ஆர்.பி பள்ளி உள்பட 13 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகின்றது.

தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு உட்பட 13 மொழிகளில் நடைபெறும் இத்தேர்வில், இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து தலா 150 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெறுகிறது. 

இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை (மூன்று மணி 20 நிமிடம்) வரை தேர்வானது நடைபெறும். 

நீட் தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் என்றாலும் மாணவர்கள் மதியம் 1:30 மணிக்குள் தேர்வு மையங்களுக்குள் வருகை தர வேண்டும். கடைசி நேரம் பதட்டங்களை தவிர்க்க மாணவர்கள் முன் கூட்டியே வீடுகளில் இருந்து தேர்வு மையங்களுக்கு புறப்பட வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவுறுத்தி உள்ளது. 

மேலும், நீட் தேர்வுக்காக வழங்கப்பட்டு உள்ள ஹால் டிக்கெட் வழிகாட்டுதல்களை மாணவ - மாணவிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த தேர்வில் வழக்கம் போல் கடுமையான பரிசோதனைகள் கடைபிடிக்கப்படும். தேர்வர்கள் செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை தேர்வு மையத்திற்கு எடுத்து வரக் கூடாது, அதேபோல் ஆடை கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுஉள்ளன.

Newsletter

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...

பீளமேடு பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்; நியாய விலை கடை உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் செப்டம்பர் 22, 2026 அன்று நான்கு முக்கிய பணிகள் நடைபெற்றன...