தசைநார் சிதைவு நோய் பாதித்த குழந்தைகளுக்காக கோவையில் கிரிக்கெட் போட்டி மூலம் நிதி திரட்டிய தன்னார்வ அமைப்பு

கோவை கருமத்தம்பட்டி பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பாலக்காடு, கரூர், நாமக்கல் மற்றும் அவிநாசியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் பங்கேற்று விளையாடின.


Coimbatore: தசைநார் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் கோவையைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் டர்ஃப் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்தி சிகிச்சைக்காக நிதி சேகரித்தனர்.

உலகெங்கும் தசைநார் சிதைவு எனப்படும் மரபணு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தசைநார் சிதைவு நோய்க்கு சிகிச்சை அளிக்க 5 கோடி ரூபாய் முதல் 12 கோடி ரூபாய் வரை செலவாகும். இந்த நோயால் பாதிக்கப்படும் ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளின் உதவியை எதிர்நோக்கி வருகின்றனர்.



இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க பெரும் பொருட்செலவாகும் என்ற நிலையில் அரசின் கவனத்துக்கு செல்லும் குழந்தைகளுக்கு மட்டும் சிகிச்சைக்கான மருந்துகள் வரிச்சலுகையுடன் கழிவு விலையில் மருந்துகள் கிடைத்து வருகின்றன. மேலும் தன்னார்வ அமைப்புகள் மூலம் கிரவுட் பண்டிங் முறையில் நிதி திரட்டப்பட்டு தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சைக்கு குலுக்கல் முறையில் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், தசை தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் கோவையைச் சேர்ந்த ரோட்டரி கிளப் ஆப் இன்ஃப்ரா என்ற தன்னார்வ அமைப்பு டர்ஃப் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி அதன் மூலம் கிடைக்கும் நிதியை சிகிச்சைக்கு வழங்க முடிவெடுத்தனர். அதன்படி கோவை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் கிரிக்கெட் போட்டி ஞாயிறன்று நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பாலக்காடு, கரூர், நாமக்கல் மற்றும் அவிநாசியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் பங்கேற்று விளையாடின.



இதுகுறித்து ரோட்டரி கிளப் ஆப் இன்ஃப்ரா அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் காமராஜ் கூறுகையில், தசைநார் நோய் சிதைவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையிலும் நிதி திரட்டுவதற்காக இந்த கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறோம். இதில் கிடைக்கும் நிதியை தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சை மற்றும் வாழ்வை மேம்படுத்த முழுமையாக வழங்குவோம் என தெரிவித்தார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...