வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணம் அதிகம் - மாநகராட்சி ஆணையாளரிடம் காங்கிரஸ் கட்சியினர் மனு

படகு சவாரிக்கு 200 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணம் ஏழை, நடுத்தர குடும்பத்தினருக்கு பாரமாக இருக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் உரிமைத்துறை மாநில செயலாளர் இமயம் ரஹ்மத்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாலாங்குளம் குளக்கரைகள் சீரமைக்கப்பட்டு படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.

இங்கு படகு சவாரிக்கு பல்வேறு வகையான படகுகளுக்கு 200 ரூபாய் முதல் துவங்கி 1000 ரூபாய் வரை கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை அதிகம் என படகு இல்லம் அமைத்ததில் இருந்தே பலரும் தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில் இக்கட்டணத்தை குறைக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் உரிமைத்துறையினர் அதன் மாநில செயலாளர் இமயம் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் இன்று ஏப்ரல்.26 மனு அளித்தனர்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில், இந்த விலையானது ஏழை, நடுத்தர குடும்பத்தினருக்கு பாரமாக இருக்குமெனவும், மாநகராட்சி ஆணையாளர் இதில் தலையிட்டு கட்டணத்தை குறைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அவ்வாறு குறைத்தால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என கூறினார்.



மேலும் அங்கு பார்க்கிங் வசதி இல்லாததால் அடிக்கடி விபத்துகளும், கூட்ட நெரிசலும் ஏற்படுவதாக தெரிவித்தார்.மேலும் கரும்புக்கடை பகுதியில் தெருநாய்கள் அதிகம் உள்ளதாகவும், அதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...