மூன்றாம் உலகப்போர் வரும் சூழல் உருவாகி உள்ளது – சூலூரில் அண்ணாமலை பிரச்சாரம்

மூன்றாம் உலகப்போர் வரும் சூழல் உருவாகி உள்ளது. இதனை தடுக்கும் திறன் கொண்ட உலக தலைவராக மோடி திகழ்கிறார் என்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்தார்.


கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும், பா.ஜ.க மாநில தலைவருமான அண்ணாமலை இன்று சூலூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். செலக்கரிச்சல், அப்பநாயக்கன்பட்டி, பாப்பம்பட்டி, கள்ளப்பாளையம் ஆகிய பகுதிகள் வழியாக அண்ணாமலை தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதில், பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, பாப்பம்பட்டி பகுதியில் தேர்தல் பரப்புரை ஆற்றிய அண்ணாமலை, '1972 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்திய விவசாயிகள் உயிர் நீத்து தியாகிகளாக உள்ள இடத்தில் பிரச்சாரம் செய்வதை மரியாதைக்குறியதாக கருதுகிறேன். இன்றைய சூழலில் உலக அளவில் மீண்டும் ஒரு உலகப் போர் வரக் கூடிய நிலை உருவாகி வருகிறது. ரஷ்யா உக்ரேன் போர் நடைபெற்று வருகிறது. இப்போது இஸ்ரேல் ஈரானுக்கு இடையே பதட்டமான சூழல் உருவாகி உள்ளது. வருங் காலத்தில் சவுதி அரேபியா நாட்டில் போர் பதட்டம் ஏற்படும் என கருதப்படுகிறது.

இந்த சூழலில் மூன்றாம் உலகப்போர் வரும் சூழல் உருவாகி உள்ளது. இதனை தடுக்கும் திறன் கொண்ட உலக தலைவராக மோடி திகழ்கிறார். போர்களை நிறுத்தி உலக அமைதியை கொண்டு வரும் திறன் மோடி அவர்களுக்குத் தான் உள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகத்திற்கான தலைவராக மோடி திகழ்கிறார். அவருடைய பேச்சுக்களும் கருத்துக்களும் உலக அளவில் மதிக்கப்படுகிறது.

எனவே, நமது நாட்டின் வளர்ச்சிக்காகவும், உலக அமைதிக்காகவும் மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும். இந்த தேர்தல் நாட்டை ஆளக் கூடிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்பதை மக்கள் மனதில் கொள்ள வேண்டும். இம்முறை 400 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை பெற்று மோடி பிரதமராக வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...