கல்விக்கும், சமூக நீதிக்கும் மிகப்பெரிய எதிரி அண்ணாமலை - கோவையில் கார்த்திகேய சிவசேனாதிபதி பேட்டி

கோவையில் 2021க்கு பிறகு முதல்வரின் திட்டத்தால், போராட்டம் இல்லாமல் மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர் என்று அயலக தமிழர் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி கூறியுள்ளார்.


கோவை: கோவை நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தில் அயலக தமிழர் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி பேட்டி அளித்தார் அபபோது அவர் பேசுகையில், கோவையில் 2021க்கு பிறகு முதல்வரின் திட்டத்தால், போராட்டம் இல்லாமல் மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர். சேலம் - சென்னை நெடுஞ்சாலை, ஸ்டெர்லைட் உள்ளிட்ட போராட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. 10 ஆண்டு காலமாக தமிழ்நாட்டை பாஜக வஞ்சிக்கிறது. ஒன்றிய அரசுக்கு 1 ரூபாய் வரியாக கொடுத்தால், திரும்ப 29 பைசா தருகிறார்கள். 71 பைசாவை திருடி விடுகிறார்கள். பாஜக-வின் தில்லாலங்கடி அரசியலால் குஜராத் பணக்காரர்கள் பெரும் பலன் அடைந்து வருகின்றனர்.

இந்தியாவில் அதிக முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கோவையை பொறுத்தவரை 20 கிமீ க்கு ஒரு தொழில் உள்ளது. கல்வி நிறுவனங்களில் கோவை சிறந்து விளங்கி வருகிறது. கொங்கு நாட்டில் 20 விழுக்காடு அருந்ததியர் இன மக்கள் உள்ளனர். அவர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தது திமுக அரசு. அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி உள்ளனர். ஆட்டுக்குட்டியை தூக்கிக்கொண்டு செல்லும் அண்ணாமலை அருந்ததியின மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக வந்துள்ளார்.

அண்ணாமலை அம்மா ஊரில் 10க்கும் மேற்பட்டவர்கள் உயர் பதவியில் உள்ளனர். ஆனால் அவர் தற்போது கல்வி முக்கியமில்லை என்று கூறுகிறார். கல்விக்கும், சமூக நீதிக்கும் மிகப்பெரிய எதிரியாக அண்ணாமலை உள்ளார். கலைஞர் கொடுத்த ஓபிசி பிரிவு கோட்டாவில் படித்து ஐபிஎஸ் ஆனவர் அண்ணாமலை. அவரது குடும்பத்தினருக்கு பல ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 2 தகர பெட்டியுடன் கோவை வந்தேன் என்று அவர் சொல்வதை ஏற்று கொள்ள முடியாது. தமிழகத்தில் உள்ள அண்ணாமலை ரூ.5 லட்சத்துக்கு வாட்ச் கட்டி உள்ளார். அவர்களது நண்பர்கள் தனக்கு லட்ச கணக்கில் செலவு செய்கிறார் என அண்ணாமலை கூறுகிறார். இதிலிருந்தே தமிழகத்தின் வளர்ச்சி தெரிகிறது. அண்ணாமலை ஓட்டும் வண்டியும் டெல்லி போகாது. தாமரையும் மலராது.

டெல்லியில் பாஜக முடிவுக்கு வர போகிறது. கோவைக்கு வரவுள்ள ஸ்டேடியம் குறித்து அண்ணாமலை விமர்சித்தது குறித்த கேள்விக்கு, கோவைக்கு என்ன செய்ய வேண்டும், என்ன தேவை என்பது அரசுக்கு தெரியும். குஜராத், உத்தரபிரதேசத்துக்கும் செய்யும் மோடி தமிழ்நாட்டை கண்டு கொள்ளவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் அனைவரும் குறிப்பாக வட இந்தியாவை சேர்ந்த குறிப்பிட்ட 3 மாநிலத்தை சேர்ந்தவர்கள். விவேக் கொலை குற்றவாளி ஜான்பாண்டியனுக்கு பாஜக சீட்டு வழங்கியது தொடர்பான கேள்விக்கு, அண்ணாமலை தான் பதில் கூற வேண்டும் என்றார். கோவையில் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் மிகப்பெரிய வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...