திருப்பூர் அருகே காரும் , அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு..!

60 வது திருமண நாளை திருக்கடையூரில் கொண்டாடிவிட்டு, மீண்டும் திருப்பூருக்கு திரும்பிக் கொண்டிருந்த சந்திரசேகர் - சித்ரா தம்பதியினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் என 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் அருகே காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காரில் பயணித்த அதே குடும்பத்தை சேர்ந்த ஒருவர் மட்டும் படுகாயங்களுடன்மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

திருப்பூரை சேர்ந்த சந்திரசேகர் மற்றும் சித்ரா தம்பதியினரின், அவர்களது 60-வது திருமண நாளை கொண்டாடுவதற்காக, நேற்றைய தினம் திருக்கடையூர் சென்று விட்டு மீண்டும் திருப்பூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். 



இன்று அதிகாலை வெள்ளகோவிலை கடந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, ஓலப்பாளையம் என்னும் இடத்தில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சந்திரசேகரின் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது, என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.



இதில் காரில் பயணித்த சந்திரசேகர், சித்ரா, இளவரசர், அரிவித்ரா, மூன்று மாத குழந்தை சாக்சி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காரில் பயணித்த மற்றொரு நபர் படுகாயர்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 

இந்த விபத்து காரணமாக, கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பதிலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக வெள்ளகோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கார் மற்றும் பேருந்தைமீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.

சாலை விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...