கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீ கடும் போராட்டத்திற்கு பின் அணைப்பு..!

தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. மேலும், சுவாசக் கோளாறு, மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகளால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு 650 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. இங்கு தினமும் சுமார் 1000 டன் குப்பைகள் சேகரமாகிறது. இதில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. ஆனாலும் டன் கணக்கில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இங்கு வெயில் காலங்களில் குப்பைகளில் அடிக்கடி தீப்பிடித்து எரிகிறது.



இந்நிலையில், குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர்.



ஆனாலும் தீயை அணைக்க முடியவில்லை தொடர்ந்து புகை வந்து கொண்டே இருந்தது. இதனால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட வாகனங்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயணைக்கும் பணி நடந்தது.



இதில் பல ஏக்கர் பரப்பளவில் டன் கணக்கில் குப்பைகள் எரிந்து சாம்பலானது.



இதனால் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் போராடி பொக்லைன் இயந்திர உதவியுடன் குப்பைகளை கிளறி தீயணைக்கப்பட்டது. தீப்பிடிக்க என்ன காரணம் என்று தெரியவில்லை. குப்பையில் மீத்தேன் வாயு உற்பத்தியாகி தானாக தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.



தீயை அணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பின் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் சுவாசக் கோளாறு, மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகளால் அந்தப் பகுதி மக்கள் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...