கோவை ஆட்சியர் வளாகத்திற்குள் உள்ள மின்மாற்றியில் திடீர் தீ விபத்து

இ-சேவை மையம் எதிரே உள்ள மின்மாற்றியில் இன்று திடீரென தீ பிடித்து எரிந்தது. அந்த தீ அருகே இருந்த சருகுகளிலும் பரவி எரியத் துவங்கியது. இதனை பார்த்த அலுவலக ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.


கோவை: கோடை வெயிலின் தாக்கத்தால் கோவை மாவட்டத்தில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இ-சேவை மையம் எதிரே உள்ள மின்மாற்றியில் இன்று (ஏப்ரல்.6) திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.



அந்த தீ அருகே இருந்த சருகுகளிலும் பரவி எரியத் துவங்கியது. இதனை பார்த்த அலுவலக ஊழியர்கள் துணிகளை கொண்டும், தண்ணீர் ஊற்றியும் தீயை அணைத்தனர்.

இதையடுத்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு மின்மாற்றியில் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...