மகளிர் உரிமைத்தொகை விடுபட்டவர்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் கிடைக்கும்-சிங்காநல்லூரில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் உறுதி

எதிரணியில் இருக்கக்கூடிய வெளியூரை சேர்ந்த வேட்பாளர்களுக்கு அரிபுரம் தெரியாது. இந்தப் பகுதி மக்களின் பிரச்சினைகள் என்னவென்று தெரியாது. அவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள் என்று திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பிரச்சாரம் செய்தார்.


கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். அதன் தொடர்ச்சியாக, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பீளமேடு பகுதி கழகம், சித்தாப்புதூர் பகுதியில் இருந்து வேட்பாளர் கணபதி ராஜ்குமார் இன்று (ஏப்ரல்.6) பிரச்சாரத்தை தொடங்கினார்.



அப்போது அப்பகுதி பொதுமக்கள் மலர் தூவி வேட்பாளரை வரவேற்றனர்.



பின்னர் வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அரிபுரம் பகுதியில் பேசுகையில், இந்தப் பகுதியை எனக்கு நன்கு தெரியும். நான் இங்கே வடக்கு மாமன்ற தலைவராக பணியாற்றிய காலம் முதற்கொண்டு, நன்கு அறிவேன். திமுக அரசு செய்த, செய்கின்ற சாதனைகளை எல்லாம் கூறி நாங்கள், வாக்குகள் சேகரித்து வருகின்றோம். மகளிர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மகளிர் உரிமைத்தொகை விடுபட்டவர்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் கிடைக்கப்பெறும். திமுக அரசின் சாதனைகளை கூறி தான் உங்களிடம் வாக்குகளை சேர்த்து வருகின்றோம்.

ஆனால் எதிரணியில் இருக்கக்கூடிய வெளியூரை சேர்ந்த வேட்பாளர்களுக்கு அரிபுரம் தெரியாது. இந்தப் பகுதி மக்களின் பிரச்சினைகள் என்னவென்று தெரியாது. அவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள். கேஸ் சிலிண்டர் விலை ஏற்றம், பெட்ரோல் - டீசல் விலையேற்றம், கட்டுப்படுத்தாத ஒன்றிய பாஜக அரசு, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவார்களா?. இதை நம்ப முடியுமா? பொய்யான வாக்குறுதிகளை கூறி வாக்கு கேட்பார்கள் அதை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

ஒன்றிய பாஜக அரசால் விலையேற்றம், நிதி அளிப்பதில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது. இதையெல்லாம் மறந்துவிடக்கூடாது. உங்களிடம் நிறைய பொய் சொல்லி வருவார்கள், இதை எல்லாம் நம்பி ஏமாந்து விடாதீர்கள். இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு வீடுகள் வேண்டும் என்று கேட்டு உள்ளீர்கள் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பட்டாவோ, அல்லது வேறிடத்தில் வீடோ உங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக அமைச்சரிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்தல் முடிந்தவுடன் முழு வீச்சில் அதை செய்து கொடுப்போம் என்பதை நாங்கள் உத்திரவாதம் கொடுக்கின்றோம். நாங்கள் என்றைக்கும் கூட இருப்போம். நான் கூப்பிடும் தூரத்தில் தான் இருக்கின்றேன். மக்களுடன் மக்களாக இருக்க வேண்டும் என மாண்புமிகு முதல்வரும், கழக தலைவருமான தளபதி அவர்கள் உத்திரவிட்டுள்ளார். அதனால் உங்களிடத்தில் தான், நாங்கள் இருப்போம், உங்கள் குறைகளை தீர்த்து வைப்போம் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...