பராமரிப்பு பணி காரணமாக கோவை-மேட்டுப்பாளையம் மெமு ரயில் ரத்து

ஏப்ரல் 6ம் தேதி கோவை-மேட்டுப்பாளையம் இடையே மாலை 5.55 மணிக்கு இயக்கப்படும் ரயிலும், மேட்டுப்பாளையம்-கோவை இடையே மாலை 4.45 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை தெற்கு இரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மேட்டுப்பாளையம் இடையே தினமும் 5 முறை மெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் இருப்புப்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று கோவை-மேட்டுப்பாளையம் இடையே கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு காலை 11.50 மணிக்கு இயக்கப்படும் ரயிலும், மேட்டுப்பாளையம் - கோவை இடையே காலை 10.55 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

அதே போல் வரும் ஏப்ரல் 6ம் தேதி கோவை-மேட்டுப்பாளையம் இடையே மாலை 5.55 மணிக்கு இயக்கப்படும் ரயிலும், மேட்டுப்பாளையம் - கோவை இடையே மாலை 4.45 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் 8 ,11 ,13ம் தேதிகளில் கோவை - மேட்டுப்பாளையம் இடையே மதியம் 3.45 மணி, மேட்டுப்பாளையம் - கோவை இடையே மதியம் 12.55 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

அதே போல் வரும் 14 , 16 , 20 , 22 , 24ம் தேதிகளில் கோவை - மேட்டுப்பாளையம் இடையே காலை 11.50 மணி, மேட்டுப்பாளையம் - கோவை இடையே காலை 10.55 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...