தாராபுரத்தில் சிவில் இன்ஜூனியரிடம் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

தாராபுரம் போளரையை சேர்ந்த சிவில் இன்ஜினியர் செந்தமிழ்ச்செல்வன் என்பவர் கட்டுமான பணிக்காக காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.10 லட்சம் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தேர்தல் பறக்கும் படையினர் தாராபுரம் பகுதியில் நடத்திய சோதனையில் சிவில் இன்ஜினியரிடம் இருந்து பத்து லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தாராபுரம் தேர்தல் பறக்கும் படை நிலை குழு அலுவலர் வெங்கடேசன் (மூலனூர் பிடிஓ) தலைமையில் தாராபுரம் கரூர் ரோடு கொளத்துப்பாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த ஒரு காரை சோதனை செய்த போது அதில் ரூ.10 லட்சம் ரொக்கம் இருந்தது.



விசாரணையில் தாராபுரம் போளரையை சேர்ந்த சிவில் இன்ஜினியர் செந்தமிழ்ச்செல்வன்( வயது 27 )கட்டுமான பணிக்காக ரூ.10 லட்சம் ரொக்கம் பெற்று செல்வதாக கூறினார். ஆனால் முறையான ஆவணங்கள் இல்லாததால் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.



தாசில்தார் இது குறித்து உதவி தேர்தல் அலுவலர் செந்தில் அரசனுக்கு தகவல் அளித்தார். செந்தில்அரசன் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்க பணத்தை பார்வையிட்டு ரூ.10 லட்சத்தை டிரசரியில் செலுத்துமாறு உத்தரவிட்டார். தாராபுரத்தில் பட்டப்பகலில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...