மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், 52-வது வார்டுக்குட்பட்ட சித்தாபுதூர் பகுதியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதையும், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதையும் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதைத்தொடர்ந்து, சித்தாபுதூர் மாநகராட்சிப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக புதிதாக போர்வெல் அமைக்கப்பட்டதை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர், தொடர்ந்து, அம்பிகா லே-அவுட்டில் நீர்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்து, அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களிடம் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், குடிநீர் குழாய்களில் நீர்கசிவு ஏற்படாவண்ணம் பார்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.



பின், திருமலைசாமி தெருவில் உள்ள வீடுகளில் காய்கறிக்கழிவுகள் மற்றும் குப்பைக் கழிவுகளைக் கொண்டு தரம் பிரித்து அதில் மக்கும் குப்பையின் மூலம் உரம் தயாரித்து அவர்களது வீட்டு தோட்டத்திற்கு பயன்படுத்தி வருவதை மாநகராட்சி ஆயைர் மற்றும தனி அலுவலர் பார்வையிட்டார்.



தொடர்ந்து, சாஸ்திரி நகர் மயானம் அருகில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி பொது கழிப்பிடத்தை அவர் ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வுகளின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உடன் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...