திருப்பூரில் ஆடு வாங்க எடுத்துச் செல்லப்பட்ட ரூ.88 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை..!

தலா ஒரு நபர் ரூ.50 ஆயிரம் வைத்திருக்கலாம் என்று நினைத்து ஒரே வாகனத்தில் வந்ததாகவும், ஒரு வாகனத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு வந்த காரணத்தினால் பணம் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்ததாக வியாபாரிகள் வேதனை.


திருப்பூர்: வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, போதிய உரிமம் இன்றி பண பரிவர்த்தனைகள் அல்லது பணத்தை எடுத்துச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று திருப்பூர் மாவட்டம், காங்கேயம்வெள்ளகோவில் அருகே மயில்ரங்கம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தேர்தல் நடத்தை விதிமுறையை முன்னிட்டு கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த சுமார் 4 நபர்கள் தலா ரூ. 22 ஆயிரம் என்ற வீதம் மொத்தம் ரூ. 88 ஆயிரம் ரொக்க பணத்தை எடுத்து வந்திருந்தனர். மேலும், தேர்தல் விதிமுறைக்கு உண்டானமதிப்பை விட அதிகளவு தொகையை எடுத்துச் சென்றதால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அந்த 4 நபர்கள் கொண்டுவந்த ரூ. 88 ஆயிரம் பணத்தையும், லோடு ஆட்டோவையும் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மயில்சாமியிடம் ஒப்படைத்தனர்.



இதனை அடுத்து, வட்டாட்சியர் மயில்சாமி அந்த நபர்களிடம் விசாரணை நடத்தியதில், அந்த நபர்கள் தாங்கள் சேலம் மாவட்டம்தாரமங்களத்தை சேர்ந்த ராஜா, அய்யனார், தனசேகர் மற்றும் முரளி என்றும் நாங்கள் 4 பேரும் ஆடு வியாபாரிகள் என்றும், வியாழக்கிழமை கன்னிவாடி வார வாரம் நடைபெறும் ஆட்டுச்சந்தைக்கு அடிக்கடி வருவதாகவும், இந்த வாரமும் ஆடுகளை வாங்க வந்துள்ளோம் என்றும், அதற்காக தலா ரூ. 22 ஆயிரம் பணத்தை வைத்திருந்தோம் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், தலா ஒரு நபர் ரூ.50 ஆயிரம் வைத்திருக்கலாம் என்று நினைத்து ஒரே வாகனத்தில் வந்ததாகவும் தெரிவித்தனர். ஆனால் ஒரு வாகனத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு வந்த காரணத்தினால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி போதிய உரிமமின்றி ரூ.88 ஆயிரம் ரொக்கப் பணத்தை எடுத்துச் சென்றதாக கூறி பணம் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்ததால் காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பதாக அந்த வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்..

ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வாங்க, விற்க நினைக்கும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு எந்த ஒரு வகையிலும் ரசீதுகள் இருக்காது. இந்த நிலையில் இவர்களின் நிலைமை கேள்விக்குறியாகி உள்ளது.

Newsletter

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...