இறக்குமதி வரி குறைத்தால் பவுனுக்கு ரூ.5,500 விலை குறையும் - கோவையில் தங்க நகை தயாரிப்பாளர்கள் விளக்கம்

மத்திய அரசு தங்கத்திற்கு இறக்குமதி வரி 15 சதவீதம் மற்றும் ஜிஎஸ்டி 3 சதவீதம் என மொத்தம் 18 சதவீதம் வரி விதிக்கிறது. இறக்குமதி வரியை 4 சதவீதமாக குறைத்தால் தற்போதைய சூழலில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.5,500 வரை குறையும் என கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துவெங்கட்ராம் தெரிவித்துள்ளார்.



கோவை: தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுபநிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவோரை கவலை அடைய செய்துள்ளது. கோவையில் நேற்று (மார்ச் 13 புதன்கிழமை) மாலை ஒரு பவுன் ஆபரண தங்கம் 48,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துவெங்கட்ராம் கூறியதாவது,



தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கோவை நகரில் தினசரி வர்த்தகம் 50 சதவீதமாக குறைந்துள்ளது. பெரும்பாலும் மக்கள் செயின், மோதிரம் உள்ளிட்ட சிறிய நகைகளை மட்டுமே வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதிக விலை காரணமாக மக்களின் வாங்கும் திறன் கணிசமாக குறைந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள வங்கிகளில் வைப்பு தொகைக்கு வட்டி விகிதம் குறைக்க உள்ளதால் எதிர்வரும் நாட்களில் இந்தியாவில் தங்கத்தின் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு தங்கத்திற்கு இறக்குமதி வரி 15 சதவீதம் மற்றும் ஜிஎஸ்டி 3 சதவீதம் என மொத்தம் 18 சதவீதம் வரி விதிக்கிறது. இறக்குமதி வரியை 4 சதவீதமாக குறைத்தால் தற்போதைய சூழலில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.5,500 வரை குறையும். மக்கள் நலன் கருதி மத்திய அரசு இந்நடவடிக்கையை எடுக்க வேண்டும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை நேரில் சந்தித்து சங்கம் சார்பில் மனு அளித்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...