கோவை மேட்டுப்பாளையம் கல்லாறு பழப்பண்ணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை - தோட்டக்கலைத்துறை அறிவிப்பு

கல்லாறு பழப்பண்ணை யானைகளின் வழித்தடத்தில் அமைந்துள்ளது தொடர்பான வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால், கல்லாறு அரசு பழப்பண்ணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குநர் சார்பில் அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - ஊட்டி செல்லும் சாலையில் கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவில் இயற்கை எழில் நிறைந்த சூழலில் அரசுத்தோட்டக்கலை பழப்பண்ணை அமைந்துள்ளது. ஆங்கிலேயர்களால் கடந்த 1900 ஆம் ஆண்டு அரசு தோட்டக்கலை பழப்பண்ணை உருவாக்கப்பட்டது. 123 ஆண்டுகள் பழமையான இந்த பழப்பண்ணை 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

சராசரியாக ஆண்டு தோறும் 70 முதல் 80 நாட்கள் வரை மொத்தமாக 130 செமீ முதல் 140 செமீ வரை மழை பெய்து வருகிறது. இந்த பழப்பண்ணையில் சிறுவர்களுக்கான விளையாட்டுத்திடல், செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.

இதில் சுற்றுலா பயணிகள் வயது வித்தியாசமின்றி விளையாடியும், குளித்தும் மகிழ்ந்து வந்தனர். இதனால் குறைந்த பொருட்செலவில் ரம்மியமான, இதமான சூழலை ரசிக்க கல்லாறு அரசு பழப்பண்ணைக்கு குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் இந்த கல்லாறு பழப்பண்ணை யானைகளின் வழித்தடத்தில் அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கல்லாறு அரசு பழப்பண்ணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குநர் சார்பில் (மார்ச்.6) அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கும் முன்னரே கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் நேற்று ஆர்வத்துடன் கல்லாறு பழப்பண்ணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திருப்பிச் சென்றனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...