ஆன்லைனில் முன்பதிவு செய்து ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவில் இலவசமாக பங்கேற்கலாம் என அறிவிப்பு

மஹாசிவராத்திரி விழாவில் இலவசமாக பங்கேற்க விரும்புவோர் https://isha.sadhguru.org/mahashivratri/ta/attend-in-person/ அல்லது isha.co/tnmsr2024-VAT என்ற லிங்கை பயன்படுத்தி பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்களை கொடுத்து இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து இலவசமாக பங்கேற்கலாம். விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு இரவு அன்னதானம் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில், வரும் 8-ம் தேதி மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் நேரடியாக பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் மஹாசிவராத்திரி விழாவில் நேரடியாக பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ஆன்லைன் மூலமும் நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்விழாவில் இலவசமாக பங்கேற்க விரும்புவோர் https://isha.sadhguru.org/mahashivratri/ta/attend-in-person/ அல்லது isha.co/tnmsr2024-VAT என்ற லிங்கை பயன்படுத்தி உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்களை கொடுத்து இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.

நேரில் பதிவு செய்ய விரும்புவோர், மார்ச் 8 ஆம் தேதி அன்று கோவை ஈஷா யோக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பதிவு மையத்தில் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம். முதலில் வருபருக்கு முன்னிரிமை என்ற அடிப்படையில் இந்த பதிவு நடைபெறும்.

ஈஷாவில் 30-ம் ஆண்டாக சத்குரு முன்னிலையில் கொண்டாடப்படும் இவ்விழாவில் இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...