கோவை மாநகராட்சி ஒப்பந்த மேற்பார்வையாளர் பாலியல் தொல்லை தருவதாக குனியமுத்தூர் 88-வது வார்டு தூய்மை பணியாளர் புகார்

மாநகராட்சி ஒப்பந்த மேற்பார்வையாளர் உதயகுமார் மிரட்டி பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், பணிக்கு வந்தால் பணிக்கு வரவில்லை என்று பொய்யாக குற்றம் சுமத்தி சம்பள பணத்தை பிடித்து வைப்பதாகவும் பாதிக்கப்பட்ட தூய்மைப்பணியாளர் பெண் குற்றம் சாட்டினார்.


கோவை: கோவை குனியமுத்தூர் 88-வது வார்டு பெண் தூய்மை பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் வார்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு வேலையை புறக்கணித்துவிட்டு தூய்மைப்பணியாளர் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தூய்மை பணியாளர் கூறுகையில், கடந்த ஒரு வருடங்களாக தூய்மை பணியாளராக 88-வது வார்டில் பணிபுரிந்து வருவதாகவும் பணி நிரந்தரம் செய்வதற்காக அதிகாரிகள் பணம் கட்ட சொல்லுகிறார்கள், பணம் தர மறுத்தால் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளுமாறு அதிகாரிகள் துன்புறுத்தி வருவதாக அவர் வேதனையை தெரிவித்தார்.

அட்ஜெஸ்ட்மென்ட் செய்யாவிட்டால் அடுத்த வார்டுக்கு பணியை மாற்றி விட்டு துன்புறுத்தி வருவதாகவும், அடுத்த வார்டில் இருக்கும் நபர்களும் பாலியல் தொல்லை கொடுப்பதாக தெரிவித்தார். மாநகராட்சி ஒப்பந்த மேற்பார்வையாளர் உதயகுமார் மிரட்டி பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், பணிக்கு வந்தால் பணிக்கு வரவில்லை என்று பொய்யாக குற்றம் சுமத்தி அவர்களின் சம்பள பணத்தை பிடித்து வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் உதயகுமாரின் சித்தப்பா வேலுச்சாமி செய்வினை செய்து விடுவதாக தூய்மை பணியாளர்களை மிரட்டி வருவதாக தெரிவித்தனர்.



மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு உதயகுமார், வேலுச்சாமி உட்பட 4 பேரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று கோவை மாநகராட்சி ஆணையாளருக்கு பாதிக்கப்பட்ட தூய்மைப்பணியாளர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...