கோவை மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி தொடக்கம்

மேட்டுப்பாளையம் நகராட்சி வார்டு எண்-2, 8, 14, 24, 28, 29, 30 ஆகியவற்றில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2024-2025 கீழ் ரூ.3 கோடி 94 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணியை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் நகராட்சி, வார்டு எண்-20, 27, 32 ஆகியவற்றில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2023-2024 கீழ் ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்ள் பயன்பெறும் வகையில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா இன்று (மார்ச்.4) தொடங்கி வைத்தார்.



மேட்டுப்பாளையம் நகராட்சி, வார்டு எண்-2, 8, 14, 24, 28, 29, 30 ஆகியவற்றில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2024-2025 கீழ் ரூ.3 கோடி 94 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்ள் பயன்பெறும் வகையில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணியை இன்று (மார்ச்.4) நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.



மேட்டுப்பாளையம் நகராட்சி நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 4 மற்றும் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை போன்ற பல்வேறு பணிகளுக்கான தேர்வு 2024-க்கு பயிற்சி வகுப்புகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (மார்ச்.4) தொடங்கி வைத்தார்.



மேட்டுப்பாளையம் நகராட்சி, வார்டு எண்-03 மற்றும் 33-ல் ரூ-52.46 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமூக கழிப்பறையை பொதுமக்ள் பயன்பாட்டிற்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (மார்ச்.4) தொடங்கி வைத்தார்.



மேட்டுப்பாளையம் நகராட்சி நந்தவனத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.22.28 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள படித்துறையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (மார்ச்.4) தொடங்கி வைத்தார். மேலும் மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

உடன் மாவட்ட கழகச் செயலாளர் தொ.இரவி தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், ஒன்றிய கழகச் செயலாளர் கல்யாணசுந்தரம், நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வின், துணைத் தலைவர் அருள் வடிவு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...