வீரபாண்டி பேரூராட்சியில் மின்சாரம் தாக்கி தூய்மைப் பணியாளர் பலி - ஒருவர் படுகாயம்

வீரபாண்டி பேரூராட்சி அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள அம்மன் நகரில் பிளக்ஸ் இரும்புப் பிரேம்களை இறக்கிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் டிரைவர் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பேரூராட்சி தூய்மைப் பணியாளர் தினேஷ் மின்சாரம் தாக்கி பலியானார். மாரிமுத்து என்பவர் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள வீரபாண்டி பேரூராட்சியில் தினேஷ் மற்றும் மாரிமுத்து ஆகியோர் தற்காலிக தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இதில் தினேஷ் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.



இந்த நிலையில் இன்று பேரூராட்சி அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள அம்மன் நகரில் பிளக்ஸ் இரும்புப் பிரேம்களை இறக்கிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் டிரைவர் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

உடனிருந்த மாரிமுத்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...