உக்கடம் காவல் நிலையத்தில் தனியார் பங்களிப்போடு ''சுகம்யா'' திட்டம் – காவல் ஆணையாளர் தொடக்கம்

கோவை மாநகரில் இடைவெளி கண்டறிதல் என்ற அடிப்படையில் ஜி.பி.எஸ் மூலம் இடங்களை குறியிட்டு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இது 50 விழுக்காடு நிறைவடைந்துள்ளது என காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் புகார் அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் கர்ப்பினிப்பெண்கள் பயன்பெறும் வகையில் இந்தியாவில் முதல் முறையாக சுகம்யா என்ற திட்டத்தை சுவர்கா அறக்கட்டாளையுடன் இணைந்து கோவை உக்கடம் காவல் நிலையத்தில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதன் மூலம் காவல் நிலையங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் உள்ளே செல்ல ஏதுவாக சக்கர நாற்காலி செல்லும் பாதை மற்றும் சக்கர நாற்காலி, செவி, பார்வை குறைபாடு உள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிய தனியார் பணியாளர் நியமனம், நேரடியாக சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத்திறனாளிகள் காவல் ஆய்வாளரை சந்திக்க ஏதுவாக ஒலி எழுப்பான் பொருத்தப்பட்டுள்ளது.



இந்தியா முழுவதும் சுமார் 50 விழுக்காடு மாற்றுத்திறனாளிகள் உள்ளதால் அவர்களுக்கான உரிமைக்காகவும், வசதிக்காகவும் இந்த சிறப்பு ஏற்பாடுகள் கோவை மாவட்டத்தில் செயல்படுத்தி உள்ளதாக அறக்கட்டளை இயக்குநர் சுவர்னலதா தெரிவித்தார்.

மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறும் போது, மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் புகார் அளிக்க வரும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.



தற்போது புதிதாக அமைக்கப்பட்டு வரும் காவல் நிலையங்களில் சக்கர நாற்காலி செல்லும் பாதை மற்றும் லிப்ட் வசதிகளுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பார்வை, செவி குறைபாடு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ தனியார் பங்களிப்புடன் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல கோவை மாநகரில் இடைவெளி கண்டறிதல் என்ற அடிப்படையில் ஜி.பி.எஸ் மூலம் இடங்களை குறியிட்டு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. 50 விழுக்காடு நிறைவடைந்துள்ளது. விரைவில் மற்ற பகுதிகளிலும் கேமராக்கள் பொருத்தப்படும். கடந்த ஆண்டில் மட்டுமே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சாலைகளை பார்த்தவாறு பொறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...