பெரியநாயக்கன்பாளையத்தில் மாவட்ட அளவிலான ஜூனியர் மற்றும் ஓப்பன் செஸ் போட்டிகள்-500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஜூனியர் மற்றும் ஓப்பன் செஸ் போட்டியில் 5 வயது முதல் 70 வயது வரையிலான 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்த நாள் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்ட அ.இ.அ.தி.மு.க மற்றும் நண்பர்கள் சதுரங்க குழு இணைந்து மாவட்ட அளவிலான ஜூனியர் மற்றும் ஓப்பன் செஸ் போட்டிகளை நடத்தியது.



கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவை புறநகர் மாவட்ட செயலாளர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் 5 வயது முதல் 70 வயது வரையிலான 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.



ஜூனியர் மற்றும் மற்றும் ஓப்பன் போன்ற பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற 100க்கும் மேற்பட்டோருக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. மேலும் ஏற்கனவே செஸ் போட்டிகளில் தேசிய அளவில் சாதனைகள் புரிந்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் கே.வி.என்.ஜெயராமன், கூடலூர் நகரச் செயலாளர் குருந்தாசலம், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி செயலாளர் ரகுநாதன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சசிக்குமார், வீரபாண்டி பேரூராட்சி செயலாளர் ராமராஜ், ஒன்றியக் கவுன்சிலர் மாணிக்கம், கோவை மாவட்ட சதுரங்க கழக இணைச் செயலாளர் ஆறுமுகம் உள்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மேற்கு மண்டலத்தில் ரூ.11.87 கோடி வளர்ச்சிப் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் ரூ.11.87 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்தி...

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...