பச்சாபாளையம் பகுதியில் 24*7 இயங்கும் தாய்பால் ஏ.டி.எம்மில் இலசமாக தாய்பால் விநியோகம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சென்டரில் அமைந்துள்ள தாய்ப்பால் 24*7 ஏ.டி.எம்.மில் 24 மணி நேரமும் இலவசமாக தாய்ப்பால் விநியோகம் செய்ய ஆரம்பித்து இருக்கின்றனர். தன்னார்வலர்கள் வாயிலாக, பால் சுரப்பு அதிகமாக இருக்கும் தாய்மார்களிடம், தாய்ப்பாலை தானமாக பெற்று வருகிறார்கள்.


கோவை: பிறக்கும் குழந்தைகளுக்கு இன்றியமையாத உனக்கு தாய்ப்பால். தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்து வேறு எந்த ஒரு உணவிலும் இல்லை என சொல்வார்கள். தாய்ப்பால் பருகி வளரும் குழந்தைகள் ஆரோக்கியமுடன் வளரும். நவீன உலகில் மாறி போகும் உணவு பழக்க வழக்கத்தால், தாய்மார்களுக்கு பால் சுரப்பு குறைந்து, பல குழந்தைகளுக்கு தாய்ப்பால் போதுமான அளவில் கிடைப்பதில்லை.

இந்த நிலையிலே குழந்தைகளுக்கு போதுமான தாய்ப்பால் கிடைப்பதற்காக, மருத்துவமனைகளில் தாய்ப்பால் தானமாக பெறப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. ஆனால் அது அனைத்து நேரத்திலும் கிடைப்பதில்லை என்பதனால் - 24*7 தாய்ப்பால் விநியோகம் செய்யப்படும் வகையில், கோவையில் தாய்ப்பால் ஏ.டி.எம். 24*7, கோவை பச்சாபாளையத்தில் திறக்கப்பட்டிருக்கின்றன .



ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சென்டரில் அமைந்துள்ள தாய்ப்பால் 24*7 ஏடி.எம்.மில் 24 மணி நேரமும் இலவசமாக தாய்ப்பால் விநியோகம் செய்ய ஆரம்பித்து இருக்கின்றனர். தன்னார்வலர்கள் வாயிலாக, பால் சுரப்பு அதிகமாக இருக்கும் தாய்மார்களிடம், உளவியல் ரீதியாக எடுத்துரைத்து விழிப்புணர்வு செய்து, தாய்ப்பாலை தானமாக பெற்று அதனை முறையாக பரிசோதனைக்கு உட்படுத்தி அந்த பால் மற்ற குழந்தைகளுக்கு ஊட்ட உகந்ததென முறையாக பரிசோத்தித்து மருத்துவர்கள் சான்றிதழ் தந்த பின்னர், இந்த தாய்ப்பால் 24*7 ஏடிஎம்மில் சேகரித்து வைக்கின்றனர்.

சேகரிக்கப்பட்ட இந்த தாய்ப்பால் குளிர்சாதன பெட்டியில் பாதுகாத்து வைப்பார்கள். தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைகளுக்கு, பச்சிளம் குழந்தைகள், மருத்துவர்கள் தருகின்ற பரிந்துரை சான்றிதலுடன், தாய்ப்பால் விநியோகம் செய்யும் ஏடிஎம்மில் அணுகினால், இலவசமாக 24 மணி நேரமும் தாய்பாலை பெற்றுக் கொள்ளலாம்.

குழந்தை பெற்று உடல் நல குறைவால் அவதிப்படும் தாய்மார்களிடமிருந்து, பச்சிளம் குழந்தைகள் பால் இன்றி தவிர்க்கும் நிலையை போக்குவதற்காக அமைக்கப்பட்ட இந்த தாய்ப்பால் 24*7 ஏ.டி.எம்., ஆரோக்கியமான குழந்தைகள் வளர அடித்தளமாக அமையும் என்று தானம் செய்வோர், தன்னார்லவர்கள், தாய்பால் 24*7 ஏ.டி.எம். நிர்வகிப்பாளர்கள் தெரிவித்தனர்

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...