வடகோவை ரயில்வே ஸ்டேஷன் மறுசீரமைப்பு பணி வேகமெடுக்கும் என எதிர்ப்பார்ப்பு

வரும் 26ம் தேதி, நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படும் 554 ரயில்வே ஸ்டேஷன்கள், 1,500 ரயில்வே மேம்பாலங்கள், கீழ்பாலங்களுக்கு அடிக்கல் நாட்டுவிழா, திறப்புவிழா மற்றும் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நடக்கவுள்ளது.


கோவை: கோவை சந்திப்புக்கு அருகிலுள்ள, வடகோவையில் மேலும் இரண்டு நடைமேடைகளை அமைத்து, விரிவாக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், வடகோவை மற்றும் போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன்களை மேம்படுத்த, முறையே ரூ.7.5 கோடி மற்றும் ரூ.24 கோடியும் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், வரும் 26ம் தேதி, நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படும் 554 ரயில்வே ஸ்டேஷன்கள், 1,500 ரயில்வே மேம்பாலங்கள், கீழ்பாலங்களுக்கு அடிக்கல் நாட்டுவிழா, திறப்புவிழா மற்றும் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நடக்கவுள்ளது.

விழாவில், பிரதமர் மோடி பங்கேற்று, காணொளியில் இவற்றைத் துவக்கி வைக்கிறார். இந்த பட்டியலில், ஆகஸ்டில் துவங்கி நடந்து வரும் வடகோவை ரயில்வே ஸ்டேஷன் மேம்பாட்டுப் பணியும் சேர்க்கப்பட்டுள்ளது. வடகோவை ரயில்வே ஸ்டேஷன் மேம்பாட்டுப் பணி, வரும் மே 31க்குள் முடிவடையுமென்று, தெற்கு ரயில்வே, செய்திக்குறிப்பில் ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பணிகள் அதற்குள் முடியுமா என்பது சந்தேகமாகவுள்ளது. பிரதமர் துவக்கி வைக்கும் திட்டப்பணிகள் பட்டியலில் இந்த ஸ்டேஷனும் சேர்ந்திருப்பதால், இனியாவது சீரமைப்பு வேலைகள் வேகமெடுக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...