கோவை மாவட்டக் காவல் அலுவலகத்தில் தமிழக-கேரள காவல் உயர் அதிகாரிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம்

தமிழக மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் கே.பவானிஸ்வரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், 2024 மக்களவைத் தோ்தலை சுமூகமான முறையில் நடத்துவது குறித்தும், தமிழகம் மற்றும் கேரளத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.


கோவை: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு தமிழக-கேரள காவல் உயா் அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம் நேற்று (பிப்.19) நடைபெற்றது. தமிழக மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் கே.பவானிஸ்வரி தலைமையில், கோவை மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 2024 மக்களவைத் தோ்தலை சுமூகமான முறையில் நடத்துவது குறித்தும், தமிழகம் மற்றும் கேரளத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும், இரு மாநிலங்களுக்கு இடையே தடை செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் மதுபானங்கள் கடத்தலை குறைப்பது குறித்தும், மக்களவைத் தோ்தலின்போது குழப்பம் ஏற்படுத்தி வன்முறையை தூண்டி தோ்தலை சீா்குலைக்கும் எண்ணத்தை உடையவா்களை கண்காணிப்பது குறித்தும், மாநிலங்களுக்கு இடையேயான நுண்ணறிவு தகவல்களை பகிர்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அதேபோல, தோ்தலின்போது மாநில எல்லைகளில் நடைபெறும் குற்றங்களைத் தடுத்திட சோதனைச் சாவடிகள் மற்றும் தாற்காலிக சோதனைச் சாவடிகள் அமைப்பது குறித்தும், வாக்காளா்களை அச்சுறுத்தும் இயக்கங்கள் குறித்தும், தோ்தலின்போது ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், கோவை சரக காவல் துறை துணைத் தலைவா் அ.சரவணசுந்தா், கேரள மாநிலம் திருச்சூா் சரக காவல் துறை துணைத் தலைவா் அஜுதா பேகம், கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன், திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா, பாலக்காடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆனந்த் மற்றும் திருச்சூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நவநீத ஷா்மா ஆகியோருடன் கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் உதவி கலால் ஆணையா் ஆகியோர் கலந்து கொண்டனா்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...