சசிக்குமார் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவரை சி.பி.சி.ஐ.டி விசாரணை மேற்கொள்ள தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை ஒத்திவைப்பு


கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட அபுதாகீர் என்பரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.



கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த செப்டம்பர் 22ம் தேதி மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த 22ம் தேதி உக்கடம் பகுதியில் சாலையோர துணிக்கடை வைத்திருந்த அபுதாகீர் என்பவரை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் அபுதாகீரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள சி.பி்சி.ஐ.டி சார்பில் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 24-ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது இன்று விசாரணை மேற்கொண்ட தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி மதுரசேகர் முன்னிலையில் கைது செய்யப்பட்ட அபுதாகீர் அஜர்படுத்தப்பட்டார். 

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதியிடம், அபுதாகீரை போலீஸ் காவலில் அனுப்பக் கூடாது என அபுதாகீர் தரப்பு வழக்கறிஞர்கள் முறையிட்டனர். மேலும் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனையடுத்து மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்து நீதிபதி மதுரசேகர் உத்திரவிட்டார். 

இதனிடையே சசிக்குமார் கொலை தொடர்பாக சதாம் உசேன், முபாரக் ஆகிய இருவரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ள சிபிசிஐடி காவல்துறையினர் அவர்கள் குறித்து தகவல் அளிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...