செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பின் இளைஞர்களிடம் பெரிய மாற்றம் - கோவையில் தமிழ்நாடு சதுரங்க கழக நிர்வாகிகள் பேட்டி

செஸ் போட்டியில் பங்கேற்க நகர் மட்டுமின்றி, ஊரக பகுதியில் இருந்தும் பலர் வர துவங்கியுள்ளனர். செஸ் போட்டிகளை நடத்துவதில் ஏற்படும் நிதிசுமைகளை குறைக்க அரசு மானியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சதுரங்க கழக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தமிழ்நாடு சதுரங்க கழக தலைவர் மாணிக்கம், பொதுச்செயலாளர் ஸ்டீபன் பாலசாமி, துணை தலைவர் ஆனந்த நாராயணன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.



அப்போது பேசிய அவர்கள், தமிழ்நாடு மாநில செஸ் அசோசியேசன் செஸ் போட்டியின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது ஐ.எம் நார்ம் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த அக்டோபரில் சென்னையில் துவங்கிய ஐ.எம் நார்ம் போட்டிகள் இடைவெளியின்றி கடந்த 17 வாரங்களாக நடத்தப்பட்டது. இதிலிருந்து 8 வீரர்கள் ஐ.எம் நார்ம்களை பெற்றுள்ளனர். இவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த ஹர்ஷ் சுரேஷ், பாண்டிச்சேரியை சேர்ந்த ஸ்ரீஹரி ஆகியோர் மூன்று ஐ.எம் நார்ம்கள் மற்றும் 2,400 தர மதிப்பீடு எடுத்து சர்வதேச மாஸ்டர் பட்டத்திற்கான தகுதியை பெற்றுள்ளனர்.

வருடத்திற்கு ஒரு சர்வதேச மாஸ்டர் கிடைத்து வந்த நிலையில், கடந்த 2 மாதத்தில் இரண்டு பேர் சர்வதேச மாஸ்டராகி இருப்பது பெரிய விஷயம். இது போன்ற போட்டிகள் மூலம் வருடத்திற்கு 10 மாஸ்டர்களை உருவாக்க முடியும். பள்ளி தேர்வுகள் நடப்பதால் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் போட்டிகள் ஜூலை மாதம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பின் இளைஞர்களிடம் பெரிய மாற்றத்தை காண முடிகிறது. ஏராளமான இளைஞர்கள் செஸ் போட்டிகளில் பங்கேற்க ஆர்வம்காட்டி வருகின்றனர். அரசு சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கும் செஸ் போட்டிகளை நடத்தி வருகிறது. நகர் மட்டுமின்றி, ஊரக பகுதியில் இருந்தும் பலர் வர துவங்கியுள்ளனர். இந்நிலையில், செஸ் போட்டிகளை நடத்துவதில் ஏற்படும் நிதிசுமைகளை குறைக்க அரசு மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

கோவை மேற்கு மண்டலத்தில் ரூ.11.87 கோடி வளர்ச்சிப் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் ரூ.11.87 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்தி...

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...