கோவை மாவட்டத்தில் போலீஸ் உடல் தகுதி தேர்வு இன்றுடன் நிறைவு

எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கயிறு ஏறுதல், உயரம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஆண்கள் 208 பேர், பெண்கள் 229 பேர் கலந்து கொண்டனர்.


கோவை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2-ம் நிலை காவலர்கள், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்கள் ஆகியோருக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான உடற்தகுதி தேர்வுகள் கடந்த 6-ந் தேதி முதல் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

கோவையில் உடற்தகுதி தேர்வுகள் பெண்களுக்கு நேரு விளையாட்டு மைதானத்திலும், ஆண்களுக்கு போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்திலும் நடைபெற்று வருகிறது. இந்த உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு முதல் நாளில் சான்றிதழ், உயரம் சரிபார்ப்பு மற்றும் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.

இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கயிறு ஏறுதல், உயரம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஆண்கள் 208 பேர், பெண்கள் 229 பேர் கலந்து கொண்டனர். கடந்த 6ம் தேதி தொடங்கி 5 நாட்களாக நடைபெற்று வந்த இந்த உடல் தகுதி தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்க்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...