கோவை உற்பத்தித்திறன் குழு சார்பில் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து கோவையில் இன்று கருத்தரங்கம்

பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வோடும் விதிகளின்படியும் அமலாக்கவேண்டியவைகள் குறித்து நிறுவனங்களுக்கு மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை உற்பத்தித்திறன் குழு, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநனரத்தின் வழிகாட்டுதலின்படி இன்று ஒரு நாள் கருத்தரங்கு கோவையில் நடைபெற்றது.



முதன்முறையாக நடைபெறும் இந்த கருத்தரங்கை கே.பி.ஆர் குழு தலைவர் கே.பி.ராமசாமி துவக்கி வைத்தார். இநநிகழ்ச்சியின் தொடக்கத்தில் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி ஏ.எம்.நடராஜன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், தொழில்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை கூடுதல் இயக்குநர் கே.அருள் கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும், ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் (மனிதவள மேம்பாட்டுத்துறை) கவிதாசன் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை குறித்து எடுத்துரைத்தார்.

இதனைத்தொடர்ந்து, தி க்ரோத் அகாடமியின் தலைமை வழிகாட்டியான ஆர்.துரைசாமி 'சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு செயல்பாடுகளுக்கான ஊக்குவிப்பு' பற்றியும், ஐடிசி நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் ஆர்.சண்முகநாதன் 'சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பற்றிய சட்டமுறைகள்' என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர்.

தொடர்ந்து, 'அவசரகால நடவடிக்கைகள்' என்ற தலைப்பில் வந்தே மாதரம் மாதவன் மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதார துறையின் ரமேஷ் ராஜா பிரபு ஆகியோர் உரையாற்றினர்.

மேலும், இக்கருத்தரங்கின் ஒரு பகுதியாக ''விபத்துக்கு பெரிதும் காரணம்'' என்னும் தலைப்பில் 'அறியாமையே', 'அலட்சியமே' என்னும் இருவேறு கருத்தில் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.

இதில், அறியாமையே என்னும் கருத்தில் கோவை பொன்.அண்ணாதுரை மற்றும் வைகறை பூங்கொடி ஆகியோரும், அலட்சியமே என்னும் கருத்தில் கோவை ஃப்லோ லின்க் சிஸ்டம்ஸ் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி குருசெல்வராஜ் மற்றும் இன்டகரா ஆட்டோமேஷன் தலைமை மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி ஏ.பொன்மலர் ஆகியோரும் பேசவுள்ளனர். 

இப்பட்டிமன்றத்திற்கு கோவை உற்பத்தித் திறன் குழு தலைவர் கவிதாசன் நடுவராக செயல்படவுள்ளார்.

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...