பெரியகவுண்டனூரில் பிளாஸ்டிக், டயர் கழிவுகளை எரிப்பதால் நிலத்தடி தண்ணீர் மாசடைவதாக விவசாயிகள் புகார்

விளை நிலங்களுக்கு நடுவில் கழிவுகளை கொட்டி எரித்து வரும் தனியார் நிறுவனத்தின் மீது ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள பெரியகவுண்டனூர் பகுதியில் விளை நிலங்களுக்கு நடுவில் தனியார் நிறுவனம் ஒன்று பிளாஸ்டிக் மற்றும் டயர் கழிவுகளை குவியலாக கொட்டி வைத்து ஒரு வகையான அமிலத்தை கொண்டு எரித்து சாம்பலாக்கி அதை விற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த கழிவுகள் எரிக்கப்படும் போது ஏற்படும் புகையால் அதைச் சுற்றியுள்ள தென்னை மரங்கள் பாதிக்கப்படுவதோடும், அமிலங்களை ஊற்றி கழிவுகளை எரித்து வருவதால் மண்ணின் சத்துத்தன்மை குறைந்து வருவதோடு நிலத்தடி நீரும் மாசடைந்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.



மேலும் அங்குள்ள ஆழ்துளை கிணறு மூலம் வரும் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றத்துடன் இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் புகார் தெரிவித்ததையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதிரடியாக அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கழிவுகளைக் கொட்டி எரித்து வருவதற்கு மாசுக்கட்டுபாடு வாரியத்தில் அனுமதி வாங்கப்பட்டதா என்று அந்நிறுவன ஊழியரிடம் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த நிறுவனத்தைச் சுற்றியுள்ள ஆழ்துளை கிணறில் இருந்து மாசடைந்து வரும் தண்ணீரையும் சோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

தொடர்ந்து இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்து வந்ததாகவும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் விரைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விலை நிலங்களை காப்பாற்ற முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...