குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிப்பு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் பிரதான சாலையில் குறுந்தாடி என்னும் பகுதியில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் மண் சரிவு ஏற்பட்டது. 



இதனால், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வரும் வாகனப் போக்குவரத்தும், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் வாகனப் போக்குவரத்தும் சுமார் மூன்று மணிநேரம் ஸ்தம்பித்தது.



மண்சரிவு குறித்த தகவலறிந்த குன்னூர் கோட்டாட்சியர் சீதா பிரியா மற்றும் வருவாய் துறை அலுவலர் வசந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதைத்தொடர்ந்து, மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண்சரிவினை அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயனைப்புத் துறையினர் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் சாலையில் இருந்த மண்களை அகற்றினர். இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் போக்குவரத்து சீரடைந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், கடந்த ஒரு வாரத்திற்கு மூன்பு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேலாக குன்னூர், நீலகிரி, உதகை உட்பட்ட பகுதிகளில் மழை பெய்தது. அதனைத்தொடர்ந்து நிலவிவந்த வெயிலின் காரணமாக மண்ணின் ஈரம் உறிஞ்சப்பட்டதால் தற்போது இவ்வாறான மண் சரிவு ஏற்பட்டுள்ளது' என்றனர்.

முன்னதாக, மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் எவ்வித வாகனங்களும் கடக்காததால் பெரிய அளவிலான உயிர்சேதம் மற்றும் பொருட்சேதங்கள் தடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...