ஆர்.பொன்னாபுரத்தில் தேனீக்கள் கொட்டியதில்முன்னோர் வழிபாடு நிகழ்ச்சியில் பங்கேற்ற 4 குழந்தைகள் உட்பட 34 பேர் காயம்

முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபாடு நடத்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி பொங்கல் வைக்க தீ மூட்டியபோது, மரக்கிளையில் இருந்த தேனீ கூட்டிற்கு புகை பரவியது. அப்போது, தேனீக்கள் கலைந்து அங்கு இருந்துவர்களை கொட்டி தாக்கியுள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆர்.பொன்னாபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் தை 1ம் தேதி பொங்கல் திருநாளை முன்னிட்டு கிராம மக்கள் ஒன்று கூடி தங்களது உறவினர்களுடன் பொங்கலிட்டு தங்களது முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபாடுகள் செய்வது வழக்கம்.

அதன்படி, இன்று 100க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் பொங்கல் வைத்துள்ளனர். அப்போது இவர்கள் பொங்கல் வைக்க பயன்படுத்திய தீயின் புகை அங்கு மரக்கிளையில் இருந்த தேனீ கூட்டில் பரவியதால் தேனீக்கள் கலைந்து அங்கு இருந்துவர்களை கொட்டி தாக்கியுள்ளது.



இதில் நான்கு குழந்தைகள் உட்பட 34 பேர் பாதிப்படைந்துள்ளனர். பின்பு பாதிக்கப்பட்டவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...