கோவையில் சங்கரய்யாவுக்கு அஞ்சலி - 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட குழு சார்பில் சங்கரய்யாவுக்கு இரங்கல் ஊர்வலம் மற்றும் நினைவேந்தல் கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட குழு அலுவலகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் 100 அடி சாலை வழியாக சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் நிறைவடைந்தது.


கோவை: சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் 15வது மாநிலச் செயலாளரும், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவருமான சங்கரய்யா இயற்கை எய்தினார். அவரது இறுதி ஊர்வலம் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் சங்கரய்யாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் சங்கரய்யாவுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை மாவட்ட குழு சார்பில் இரங்கல் ஊர்வலம் மற்றும் நினைவேந்தல் கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட குழு அலுவலகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் 100 அடி சாலை வழியாக சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் நிறைவடைந்தது.



இந்த ஊர்வலத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



மேலும் இந்நிகழ்வில் சங்கரய்யாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.



இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், கோவை மாவட்ட செயலாளர் கே.பத்மநாபன், தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...