தொழில்நுட்ப ஜவுளிக் கருத்தரங்கில் கலந்து கொள்ள கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு

இந்திய தொழில் கூட்டமைப்பு(CII) மூலமாக வருகிற 17.11.2023 அன்று கோயம்புத்தூரில் உள்ள ஹோட்டல் லீ மெரிடியனில், தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை, ஒன்றிய அரசின் ஜவுளித் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு(CII) ஆகியவை இணைந்து தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கம் நடத்த உள்ளன.


கோவை: கோவையில் வருகின்ற 17ம் தேதி நடைபெற உள்ள தொழில்நுட்ப ஜவுளிக் கருத்தரங்கில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியாவின் துணிநூல் மற்றும் ஆயத்த ஆடைகள் சந்தையில் தொழில்நுட்ப ஜவுளிகள் 13 சதவீதம் பங்களிப்பு வழங்குகின்றன. தொழில்நுட்ப ஜவுளித்துறை ஆண்டிற்கு 12 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடையும் என்றும், 2030 ஆம் ஆண்டிற்குள் சந்தை மதிப்பில் 45 பில்லியன் அமெரிக்கா டாலர் அளவிற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நமது நாட்டில் தொழில்நுட்ப ஜவுளித்துறை நேரடியாக 12 இலட்சம் நபர்களுக்கும், மறைமுகமாக 50 இலட்சம் நபர்களுக்கும் வேலைவாய்ப்பினை வழங்கி வருகிறது.

இந்தியதொழில் கூட்டமைப்பு(CII) மூலமாக வருகிற 17.11.2023 அன்று கோயம்புத்தூரில் உள்ள ஹோட்டல் லீ மெரிடியனில், தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை ஒன்றிய அரசின் ஜவுளித் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு(CII) ஆகியவை இணைந்து தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கம் நடத்த உள்ளன.

மேற்படி கருத்தரங்கில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வல்லுநர்கள் தொழில்நுட்ப ஜவுளி துறையில் உள்ள வாய்ப்புகள் வளர்ச்சி. புதிய முதலீடுகள். பன்னாட்டு சந்தை மற்றும் அதனுடைய போக்கு குறித்து கலந்துரையாடல் நடைபெற இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளுவதற்கு இணையதள உள்ளது.

முன்பதிவு செய்வதற்கான இணைப்பு (https://bit.ly/CIITechnicalTextiles). மேற்படி கருத்தரங்கில் ஜவுளிதொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, மண்டல துணை இயக்குநர் சு.இராகவன்- 9443570745 மண்டல துணை இயக்குநர் அலுவலகம், அறை எண்.502, ஐந்தாவது தளம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம். திருப்பூர்-641804.

மின்னஞ்சல்: [email protected] தொலைபேசி எண்: 0421 2220035. 9442186070, 9750160503 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...