தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் பேருந்து நிலையங்கள் மாற்றம்

தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, தேனி மற்றும் தென் மாவட்டங்களுக்கும், சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேலம், திருப்பூர், ஈரோடு, ஆனைகட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம் சாலை வழியாக ஊட்டி, கூடலூர் செல்லும் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.


கோவை: வருகின்ற 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் பலரும் அவர்களது சொந்த ஊர்களுக்குச் சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு திரும்புவர். இந்நிலையில் கூட்ட நெரிசலை குறைக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டத்தின் சார்பில் தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்கும் வண்ணம் தற்காலிகமாக பேருந்து நிலையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை தேனி மற்றும் தென் மாவட்டங்களுக்கும், சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து கரூர் திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேலம் திருப்பூர் ஈரோடு ஆனைகட்டி மேட்டுப்பாளையம் சத்தியமங்கலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம் சாலை வழியாக ஊட்டி கூடலூர் செல்லும் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

மேலும் தீபாவளி பண்டிகைக்காக கோவை மதுரைக்கு 100 பேருந்துகள், கோவை திருச்சிக்கு 80 பேருந்துகள், கோவை தேனிக்கு 50 பேருந்துகள், கோவை சேலத்திற்கு 60 பேருந்துகள் என சிறப்பு பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இவை வரும் 9ம் தேதி முதல் 11ம்தேதி வரை செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அனைத்து பேருந்து நிலையங்களுக்கும் காந்திபுரம் நகர பேருந்து நிலையம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...