கோவையில் விசாரணைக்கு வரமறுத்து காவலரின் கையை கடித்து தாக்கியவர் கைது

காரை வாங்கிக்கொண்டு அதற்கு பணம் தராமல் ஏமாற்றி வந்தது தொடர்பான புகாரில், காவல்நிலையத்திற்கு அழைத்து வர சென்ற தலைமை காவலர் புகழேந்தியின் இடது கையை கடித்து விட்டு, தனக்குத்தானே சுவற்றில் முட்டி நெற்றியில் காயம் ஏற்படுத்திக்கொண்டு நாடகமாடிய பிரகாசம் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை கணபதிபுதூர் தரணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (38). இவர் தனது காரை கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் தனக்கு பழக்கமான கோவை கணபதி, வெற்றி விநாயகர் நகர் பகுதியைச் சேர்ந்த பிரகாசம் என்பவருக்கு ரூ.2,30,000க்கு விற்பனை செய்துள்ளார்.

பணத்தை பின்னர் தருகிறேன் என்று கூறி காரை எடுத்துச் சென்றவர் பணத்தை தராமல் காலம் கடத்தி வந்துள்ளார். இது குறித்து சண்முகசுந்தரம் கடந்த 2022 ம் ஆண்டு மார்ச் மாதம் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் சரவணம்பட்டி காவல்துறையினர் பிரகாசத்தை அழைத்து விசாரித்த போது இன்னும் ஒரு மாதத்திற்குள் பணத்தை திருப்பித் தருவதாக எழுதிக் கொடுத்து சென்றுள்ளார். அதனைத்தொடர்ந்து பிரகாசம் வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு சென்று விட்டார்.

இது குறித்த தகவல் அறிந்த சண்முகசுந்தரம் பிரகாசத்தை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மீண்டும் கடந்த செப்டம்பர் மாதம் ஆன்லைன் மூலமாக புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் சரவணம்பட்டி காவல்துறையினர் பிரகாசம் குறித்து விசாரித்து அவரது செல்போன் எண் மூலமாக அவர் குடியிருக்கும் முகவரியை கண்டுபிடித்தனர்.

இது குறித்து சண்முகசுந்தரத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சரவணம்பட்டி காவல் நிலைய தலைமை காவலர் புகழேந்தி பீளமேடு சிவராம் நகர் ஆடிஸ் வீதியில் குடியிருக்கும் பிரகாசம் வீட்டிற்கு சென்று பிரகாசத்தை அழைத்துவர சென்றுள்ளார்.

அப்போது பிரகாசம் வர மறுத்து தலைமை காவலர் புகழேந்தியின் இடது கையை கடித்து விட்டு, தனக்குத்தானே சுவற்றில் முட்டி நெற்றியில் சிறிய அளவில் ரத்தக்காயம் ஏற்படுத்தியுள்ளார். காவலர் புகழேந்தி தன்னைத் தாக்கியதாக நாடகமாடியுள்ளார் மேலும் காவலர் புகழேந்தியை பிரகாசம் கடித்ததில் அவருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவலர் புகழேந்தி சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

இந்த தகவலின் அடிப்படையில் சரவணம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரகாசத்தை சரவணம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் பிரகாசம் வார பத்திரிகைகளில் செய்தியாளராக நிருபராக பணியாற்றி வருவதாக தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பிரகாசம் கடித்ததால் கையில் காயம் அடைந்த தலைமை காவலர் புகழேந்தி அளித்த புகாரின் அடிப்படையில சரவணம்பட்டி காவல்துறையினர் பிரகாசத்தின் மீது காவலரை பணியைச் செய்ய விடாமல் தடுத்தது, தகாத வார்த்தைகள் பேசியது, கடித்து தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் பிரகாசம் ஏற்கனவே கோவை அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரியை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...