விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் - மாணவர்களுக்கு மத்திய அமைச்சர் எல் முருகன் அறிவுரை

உடலுக்கு உறுதியும், மனதிற்கு அமைதியையும் தருவது விளையாட்டு என்பதால் மாணவர்கள் விளையாட்டிலும் கவனம் செலுத்தி வெற்றிபெற வேண்டும் என மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை இரத்தினம் கல்விக் குழுமத்தில் "இரத்தினம் ஸ்போர்ட்ஸ் அகாடமி " திறப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் முனைவர்.மதன்.ஆ.செந்தில் தலைமை தாங்கினார்.

இரத்தினம் கல்விக் குழுமங்களின் இயக்குனர் சீமா செந்தில் முன்னிலை வகித்தார்.



சிறப்பு விருந்தினர் எல்.முருகன், இரத்தினம் ஸ்போர்ட்ஸ் அகாடமியினை தன் பொற்கரங்களால் திறந்து வைத்தார்.



பூப்பந்து மைதானம், கூடைப்பந்து மைதானம் என பல விளையாட்டு மைதானங்கள் இங்கு அமைந்துள்ளன. இந்த விளையாட்டு மைதானங்களின் மொத்த மதிப்பு சுமார் மூணு கோடி ரூபாய் ஆகும்.

பின்னர் அவர் பேசுகையில்," உடலுக்கு உறுதியும், மனதிற்கு அமைதியையும் தருவது விளையாட்டு ஆகும். மாணவர்கள் விளையாட்டிலும் கவனம் செலுத்தி வெற்றிபெற வேண்டும். நமது நாட்டின் விளையாட்டு வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 107 பதக்கங்களும், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 111 பதக்கங்களும் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்து உள்ளனர். அதேபோல் இரத்தினம் கல்விக் குழுமங்களின் மாணவ, மாணவியரும் வரலாற்றுச் சாதனை படைக்க வேண்டும் என்று கூறினார்.

இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் முனைவர்.மதன்.ஆ.செந்தில் பேசுகையில்,"நமது இரத்தினம் கல்விக் குழுமங்களின் மாணவ,மாணவியர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பல்கலைக்கழக அளவிலும், தேசிய அளவிலும் சாதனை படைத்து வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கவும், மேலும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியருக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்து அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வதே இந்த இரத்தினம் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் நோக்கமாகும்" என்று கூறினார்.

இந்த விழாவில் இரத்தினம் கல்விக் குழுமங்களின் செயலாளர் முனைவர்.மாணிக்கம் இரத்தினம் கல்விக் குழுமங்களின் துணைத் தலைவர் முனைவர்.பா.நாகராஜ் மற்றும் இரத்தினம் கல்விக் குழுமங்களைச் சேர்ந்த அனைத்து கல்லூரிகளின் முதல்வர்கள் பேராசிய பெருமக்கள் மற்றும் மாணவ மாணவியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...